வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (04/12/2017)

கடைசி தொடர்பு:16:57 (04/12/2017)

மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்திய ஆராய்ச்சிமணி போராட்டம்!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவக் கல்லூரி நுழைவுவாயிலில் எட்டாவது நாளாகத்  தொடர் போராட்டம் நடத்திவருகிறார்கள். மனிதச்சங்கிலி,  ஊர்வலம், வாயில் கறுப்புத்துணி, தூக்குக் கயிற்றில் தொங்குவது, சவப்பெட்டிக்குள் படுத்துக்கொண்டு சுற்றியிருப்பவர்கள் அழுவது போன்ற பல போராட்டங்களை நடத்திவந்தவர்கள். இன்று, ஆராய்ச்சிமணி அடித்து அரசிடம் கோரிக்கை வைப்பதுபோல செய்து,  தினமொரு போராட்டத்தை நடத்திவருகிறார்கள்.

மதுரை மருத்துவக்கல்லூரி

போராட்டம்குறித்து நம்மிடம் பேசிய மாணவர்கள், ``மருத்துவப்பணியில் உள்ள நடைமுறைகளைப் பின்பற்றாமல், தனியார் மருத்துவர்களுக்கு முக்கியத்துவம்கொடுத்து, முறைகேடாக நடந்த மருத்துவர் தேர்வை ரத்துசெய்ய வேண்டும். முறைகேடாக நடத்தப்பட்ட நேர்முகக் கலந்தாய்வை ரத்துசெய்ய வேண்டும். 69 சதவிகித இட ஒதுக்கீட்டை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்’' என்றனர். இதுவரை மாவட்ட நிர்வாகமும்  மருத்துவத்துறை அதிகாரிகளும் இவர்களை அழைத்துப் பேசாமல், போராட்டத்தை வேடிக்கை பார்ப்பதாகச் சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க