சொகுசு கார் மோசடி வழக்கில் சிறைக்கு செல்வதிலிருந்து நடராசனுக்கு விலக்கு! 

சொகுசு கார் இறக்குமதி மோசடி வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் கணவர் நடராசனும், உறவினர் பாஸ்கரனும் சிறை செல்வதிலிருந்து உச்ச நீதிமன்றம் விலக்களித்துள்ளது.

நடராசன்

கடந்த 1994-ம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து சொகுசு கார் இறக்குமதி செய்தததில் ரூ.1.6 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகச் சசிகலாவின் கணவர் நடராசன், உறவினர் பாஸ்கரன், யோகேஷ் பாலகிருஷ்ணன், சுஜாரிதா சுந்தரராஜன் ஆகிய 4 பேருக்கு சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதை எதிர்த்து நால்வர் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதை நிராகரித்த உயர் நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது. 

இதற்கிடையே, சிறைக்கு செல்வதிலிருந்து  விலக்களிக்க வேண்டும் என்று ம.நடராசன், பாஸ்கரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதற்கும் உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது. இதையடுத்து, ம.நடராசன், பாஸ்கரன் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தை நாடினார்கள். ம.நடராசன் தன் உடல் நிலையைக் காரணம் காட்டி, சிறைக்கு செல்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி தீபக் குப்தா,  சிறைக்கு செல்வதிலிருந்து விலக்கு அளித்தார். பாஸ்கரனுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது அவர்கள் தற்காலிகமாகச் சிலகாலம் சிறைக்குச் செல்லத் தேவையில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!