வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (04/12/2017)

கடைசி தொடர்பு:18:20 (04/12/2017)

ஆங்கிலேயரிடம் அரசியல் கற்ற காங்கிரஸ்! - பிரதமர் மோடி தாக்கு

காங்கிரஸ் கட்சி ஆங்கிலேயரிடம் கற்ற அரசியலைச் செயல்படுத்தி வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார்.

மோடி


குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 9, 14-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்டத் தேர்தலுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. குஜராத்தில் 22 ஆண்டுகளாகப் பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. ஆட்சியைத் தக்க வைக்க அக்கட்சி மும்முரம் காட்டி வருகிறது. மறுபுறம், காங்கிரஸ் கட்சி இந்த முறை ஆட்சியைப் பிடித்தே ஆக வேண்டும் எனக் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், குஜராத் பாவ் நகரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸின் பிரித்தாளும் சூழ்ச்சியை என்னால் புரிந்துகொள்ளவே முயலவில்லை. முந்தைய காலங்களில் மக்களை சாதி ரீதியாகவும் வகுப்பு வாரியாகவும், கிராம-நகர வேறுபாட்டிலும் பிரித்து வைக்கும் அரசியலைக் காங்கிரஸ் செய்தது. இப்போது அதை மீண்டும் ஏன் கையில் எடுக்கிறது எனத் தெரியவில்லை. காங்கிரஸ் இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கற்றது ஆங்கிலேயே ஆட்சியாளர்களிடம் ஆகும். உத்தரப்பிரதேச மக்கள் காங்கிரஸை நிராகரித்துவிட்டார்கள். இந்த நிராகரிப்பு தொடரும்” என்றார்.

ஏற்கெனவே, ஒரு தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியை முகலாக மன்னர் ஔரங்கசீப்பின் ஆட்சியோடு ஒப்பிட்டு விமர்சித்திருந்தார்.