Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'உங்கள் அரசியல் பிரவேசம் இளைஞர்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கும்'- விஷாலை வாழ்த்திய அரவிந்த் கெஜ்ரிவால்

விஷால் அரசியலில் இறங்கியிருப்பது இளைஞர்களை ஊக்குவிக்கும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 


ஆர்.கே.நகரில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நடிகர் விஷால் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். அதையடுத்து இன்று காலையில் காமராஜர், எம்.ஜி.ஆர், சிவாஜி சிலைகளுக்கு மாலை அணிவித்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர், இருசக்கர வாகனத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்குத் தண்டையார்பேட்டைக்குச் வந்தார். மனுதாக்கல் செய்ய நேரம் முடிந்துவிட்டதால் அவருக்கு 68வது டோக்கன் வழங்கப்பட்டது. நீண்ட காத்திருப்புக்குப்பின் விஷால் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

இந்தநிலையில், விஷாலின் அரசியல் பிரவேசத்துக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில், 'உங்களுடைய அரசியல் பிரவேசம், பல இளைஞர்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கும். அடுத்தமுறை நீங்கள் டெல்லிக்கு வரும்போது நாம் சந்திப்போம்' என்று பதிவிட்டுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement