வெளியிடப்பட்ட நேரம்: 19:35 (04/12/2017)

கடைசி தொடர்பு:19:35 (04/12/2017)

`விஷாலால் தி.மு.க-வின் வெற்றி பாதிக்குமா?' - திருமாவளவன் பதில்

Thirumavalavan prees meet

`ஒகி புயலில் சிக்கி எத்தனை மீனவர்கள் காணாமல் போயுள்ளனர் எத்தனை மீனவர்கள் இறந்துள்ளனர் என்று அரசுத் தெளிவாக குறிப்பிடவில்லை" என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளனன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டமே முழுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ளது. மத்திய- மாநில அரசுகள் இணைந்து மீனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருப்பது ஓரளவு ஆறுதல் அளித்திருந்தாலும்கூட, இன்னும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேற்பட்டவராக இருக்கும் என மீனவர்கள் சொல்கிறார்கள். எத்தனை மீனவர்கள் காணாமல் போயுள்ளனர், எத்தனை மீனவர்கள் இறந்துள்ளனர் என்ற முழு விவரத்தை மாநில அரசு தெரிவிக்கவில்லை.

புயலுக்குப் பிறகு, போதுமான பணிகளை மத்திய- மாநில அரசுகள் செய்திருக்கலாம். இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குமரி மாவட்டத்தை அரசு பேரிடர் மாவட்டமாக அறிவிக்க  வேண்டும். தமிழக அரசு மீனவர்கள் பற்றிய சரியான கணக்கெடுப்பு எடுக்காமல் இருந்ததுதான் மீனவர்கள் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாததற்கு காரணம். தமிழக அரசு இதற்கான விளக்கம் அளிக்க வேண்டும். சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இனியும் ஒரு புயலின் தாக்கம் இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளதால் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறியும் அ.தி.மு.க அரசு பேனர்களை தொடர்ந்து வைத்துக்கொண்டுதான் உள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷால் வேட்பு மனுத்தாக்கல் செய்திருப்பது, அவரது ஜனநாயக உரிமை. விஷால் போட்டியிடுவதால் தி.மு.க வேட்பாளரின் வெற்றியை எந்த விதத்திலும் பாதிக்காது" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க