வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (04/12/2017)

கடைசி தொடர்பு:21:10 (04/12/2017)

அதானிக்கு கடன் தர மறுத்த சீன வங்கிகள்!

இந்தியத் தொழிலதிபர் அதானிக்கு கடன் வழங்க சீன வங்கிகள் மறுப்புத் தெரிவித்துள்ளன.

அதானி

தொழிலதிபர் அதானி ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்றை அமைத்து வருகிறார். இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பு 1,650 கோடி டாலர் ஆகும். இந்தவகையில் இது உலகில் உள்ள மிகப்பெரும் நிலக்கரி சுரங்கத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தத் திட்டத்தின் முதல் பாகத்தை நிறைவு செய்ய அதானிக்கு 200 கோடி ஆஸ்திரேலிய டாலர் தேவைப்படுகிறது. 

இதையடுத்து, அதானி தரப்பிலிருந்து கடன் கோரி, சீன தொழில் மற்றும் வர்த்தக வங்கியை அணுகி உள்ளனர். ஆனால், அந்த வங்கிக் கடன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. அதானியின் சுரங்கத் திட்டத்துக்கு கடன் வழங்கவில்லை என நேரடியாகக் குறிப்பிடாவிட்டாலும் கடன் மறுத்ததை மறைமுகமாக அந்த வங்கி கூறியுள்ளது. 

ஏற்கெனவே, சீன கட்டமைப்பு வங்கி அதானியின் சுரங்கத் திட்டத்துக்கு கடன் மறுத்திருந்தது. இதுபற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில் அதானி தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லை.