திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி! புதிய முறையில் தரிசன ஏற்பாடு!

காரைக்கால் அருகே திருநள்ளாறில் உலக பிரசித்திபெற்ற சனீஸ்வர பகவான் வீற்றிருக்கும் தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது.சனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்சியடைவதை சனிப்பெயர்ச்சி திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி எதிர்வரும் டிசம்பர் 19-ம் தேதி காலை 10.01 மணிக்கு சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து, தனுசு ராசிக்குப் பெயர்ச்சியடைவதால் அந்நாளில் லட்சக் கணக்கான பக்தாகள் சனிபகவானைத் தரிசிக்க வருவார்கள். அவர்களுக்குப் புதிய முறையில் தரிசன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

இதுபற்றி காரைக்கால் மாவட்ட கலெக்டர் கேசவன் பேசுகையில், ``இதற்கு முன்பு இலவச தரிசனப் பாதையில் வரும் பக்தர்கள், சனீஸ்வரபகவானை மட்டும்தான் தரிசனம் செய்ய முடியும். அதே நேரத்தில் கட்டணம் செலுத்தி தரிசனம் செய்யவரும் பக்தர்கள் சனீஸ்வரபகவானுடன் சுவாமி மற்றும் அம்பாளையும் தரிசனம் செய்ய முடியும். இந்நிலையில், கட்டண தரிசனத்துக்கு வரும் பக்தர்களைப்போல இலவசத் தரிசனத்துக்கு வரும் பக்தர்களும் சுவாமி, அம்பாள் மற்றும் சனீஸ்வரபகவானைத் தரிசிக்கும் வகையில் புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.  

பக்தர்கள் சிரமமின்றி சுவாமி, அம்பாள் மற்றும் சனீஸ்வரபகவானை தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும் தேவஸ்தான நிர்வாகமும் இணைந்து செய்துள்ளன. அதிலுள்ள குறை, நிறைகள் எல்லாம் கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில் புதிய தரிசன முறை தங்களுக்கு மிகவும் திருப்தியளிப்பதாகப் பக்தர்கள் தெரிவித்துள்ளனர். கழிவறைகளைச் சுத்தமாகப் பராமரிப்பது, நளன்தீர்த்தம் மற்றும் திருநள்ளாறு பகுதியிலுள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்றி சுகாதாரத்தைப் பேணுவதில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. சனிப்பெயர்ச்சிக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. நாடு முழுவதிலிருந்தும் லட்ச கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன'' என்றார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!