சென்னைப் பொழிச்சலூரில் தற்கொலைக்கு முயன்ற வடமாநில இளைஞர்!

சென்னையை அடுத்துள்ள பொழிச்சலூரில் கைகள் மற்றும் நாக்கை கத்தியால் அறுத்துக்கொண்ட வடமாநில இளைஞர் ஒருவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காதல் தோல்விதான் இதற்குக் காரணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

காதல்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த். சென்னையை அடுத்த பொழிச்சலூர் மூவர் நகரில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்களோடு தங்கி அப்பகுதியில் பிளம்பிங் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பிரசாந்தின் நண்பர்கள் வெளியில் சாப்பிடச் சென்றனர். திரும்பி வந்து பார்த்தபோது, இரண்டு கைகள் மற்றும் நாக்கில் கத்தியால் அறுத்துகொண்ட நிலையில் பிரசாந்த், ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனே அவரை நண்பர்கள் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சென்னை அரசுப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. “பிங்கி என்பவரை பிரசாந்த் காதலித்ததாகவும்,  அவரிடம் அடிக்கடி போனில் பேசி வந்ததாகவும் தெரியவந்தது. அதில் ஏற்பட்ட தகராறில் தற்கொலை முயற்சி செய்திருக்கலாம்’’ என்று சங்கர் நகர் காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!