`பேரிடர் காலத்தில் மக்களைக் காப்பாற்றும் எந்த வசதியும் தமிழகத்தில் இல்லை..!' – சீமான் தாக்கு

”பேரிடர் காலங்களில் மக்களைக் காப்பாற்றுவதற்கான எந்த வசதியும் தமிழகத்தில் இல்லை” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். 

seeman press meet

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,  “ஒரு பேரிடர்  நடந்தால், அதிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கான எந்த வசதியும் தமிழக அரசிடம் இல்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களைக் கண்காணிக்கும் ஆற்றல், சீனா போன்ற நாடுகளில் உள்ளது. ஆனால், நம்மிடம் எந்தவித வசதியும் இல்லை. ஒகி புயலின்போது கடலுக்குள் சென்ற மீனவர்களின் எண்ணிக்கை 500தான் எனச் சொல்கிறது அரசு. ஆனால், சுமார் 2,000 மீனவர்கள் கடலுக்குள் சென்றனர் என்கிறார்கள் மீனவர்கள். இந்த நிலையில், புயலுக்குப் பிறகே மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றார்கள் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறிய பொறுப்பற்ற பதில் வேதனை அளிக்கிறது.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வரோ பிரதமரோ ஆறுதல்கூட சொல்லவில்லை. அநாதை மக்கள்போல, துண்டிக்கப்பட்ட தீவு போல ஆகிவிட்டது கன்னியாகுமரி. குஜராத் மாநிலத்தில் பாதிப்பு ஏற்பட்டால் மட்டும் உடனடியாக நிவாரணத்தை அறிவிக்கும் பிரதமர் மோடி, தமிழகத்தைக் கண்டுகொள்ளாததற்குக் காரணம் என்ன? குமரியில் உள்ள மத்திய அமைச்சர் பொன்னார் எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!