மணல் குவாரிகளை மூட உத்தரவிட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மூன்று மாவட்ட ஆட்சியர்கள் மனு!

 

தமிழகத்தில் உள்ள அனைத்து  மணல் குவாரிகளையும் 6 மாதத்திற்குள் மூட வேண்டும். ஜல்லியைத் தவிர கிரானைட் குவாரி  உள்ளிட்ட பிற கனிம குவாரிகளைப் படிப்படியாக மூட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை  எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் குமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

'தமிழகத்தில் உள்ள அனைத்து  மணல் குவாரிகளையும் 6 மாதத்திற்குள் மூட வேண்டும். தமிழகத்தில் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்கும்பொருட்டு ஜல்லியைத் தவிர கிரானைட் குவாரி  உள்ளிட்ட பிற கனிம குவாரிகளைப் படிப்படியாக  மூட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளிலிருந்து இயற்கை மணலை இறக்குமதி  செய்ய ஏதுவாக, தமிழக அரசு தேவையான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்' என்று நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.  மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயற்கை மணலை, தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து  வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க அனுமதி அளிக்க வேண்டும் என ராமையா என்பவர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல்செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், இறக்குமதி செய்யப்பட்ட மணலை கொண்டுசெல்ல அனுமதி வழங்கி மேற்கண்ட உத்தரவை வழங்கினார். இந்த நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை ரத்துசெய்யக் கோரி குமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!