மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவு நாள் இன்று!

 மறைந்த, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

ஜெயலலிதா

கோமளவள்ளி என்ற பெயரை அவரே மறந்திருப்பார். பிறந்ததும் ஜெயலலிதாவுக்கு சூட்டப்பட்ட பெயர் அது. ஆனால், சில காலத்தில் 'ஜெயலலிதா' ஆனார். ஜெயா, ஜெய், லில்லி எனப் பல பெயர்களில் பள்ளித் தோழிகளால் அழைக்கப்பட்டவர். அவரது அம்மாவுக்கு 'அம்மு'. அ.தி.மு.க-வினர் அனைவருக்கும் 'அம்மா'!

சர்ச் பார்க் கான்வென்ட் மாணவி என்றுதான் பலருக்கும் தெரியும். ஆனால், மாம்பலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டுத்தான் மெட்ரிக் வரை சர்ச் பார்க்கில் படித்தார். 'எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தால், சர்ச் பார்க்கில் படிக்க வேண்டும்' என்பதைத் தனது ஆசையாகச் சொல்லியிருந்தார். 

ஜெயலலிதா நடித்த படங்கள் 115. இதில், எம்.ஜி.ஆருடன் நடித்தவை 28. இருவரும் இணைந்து நடித்த முதல் படம் 'ஆயிரத்தில் ஒருவன்'.  'சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா' என்ற 'அரசிளங்குமரி' படப் பாடல்தான் தனக்கு எப்போதும் பிடித்த நல்ல பாட்டு என்பார். அந்தப் பாடலை எழுதிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மனைவியிடம் 10 லட்சம் பணம் கொடுத்து, அவரது எழுத்துகளை நாட்டுடைமையாக்கினார்.

2016-ம் ஆண்டு, தமிழக முதல்வராகப் பதவியில் இருக்கும்போதே, உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு, கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி, ஜெயலலிதா உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவரது முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!