கரையை கடக்கிறதா ஒகி புயல்? - தயார் நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு

ஒகி புயல் இன்று இரவு குஜராத் மாநிலத்தில் கரையைக் கடக்கவுள்ளது. இதனால் அரபிக்கடலில் அமைந்துள்ள மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு தேசிய பேரிடர் குழு தயார் நிலையில் உள்ளது. ஒகி புயல் பற்றி விவாதிக்க தேசிய அவசரநிலை மேலாண்மைக் குழுக் கூட்டம் நேற்று மாலை டெல்லியில் அதன் செயலர் பி.கே. சின்ஹா தலைமையில் நடந்தது.

water

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள்குறித்து அவர் ஆய்வு செய்தார். இந்தப் புயல் காரணமாக இன்று பாதிக்கப்படக் கூடிய மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் மீட்பு மற்றும் நிவாரணக்குழுவினர் தயார் நிலையில் இருப்பதுகுறித்தும் இந்தக் குழுவினர் சீராய்வு செய்தது.

ஒகி புயல் மிகத் தீவிரமான புயலாக கிழக்கு மத்திய அரபிக்கடலில் வடக்கு நோக்கி மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து  வருகிறது. மேற்கு கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களைத் தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, அந்தமான் நிகோபார் தீவுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தயார் நிலைகுறித்தும் ஆய்வுசெய்தனர். மீனவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இதுதொடர்பாக போதிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. 

குஜராத் புயல்

மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுடன் அமைச்சரவைச் செயலர் காணொளி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி ஆய்வுமேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சகம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், பாதுகாப்பு அமைச்சகம், இந்தியக் கடற்படை, இந்திய விமானப்படை, இந்தியக் கடலோரக் காவல் படை, புவி அறிவியல் அமைச்சக, இந்திய வானிலை ஆய்வுத்துறை ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்தியக் கடலோரக் காவல்படை மற்றும் இந்திய விமானப்படை மற்றும் இந்தியக் கடற்படை மற்றும் உள்ளூர் அரசு முகமைகள் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!