ஜெ. சமாதியில் கறுப்புச் சட்டை அணிந்து கண்ணீர் விட்ட முதல்வர், துணைமுதல்வர்!

ஜெயலலிதா

சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

எடப்பாடி பழனிசாமி

உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்தாண்டு டிசம்பர் 5-ல் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவரது முதலாமாண்டு நினைவுதினத்தை இன்று தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க-வினர் அனுசரித்துவருகின்றனர்.  

jayalalithaa

அ.தி.மு.க அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், தொண்டர்கள் என அனைவரும் கறுப்புச் சட்டை அணிந்து அண்ணாசாலையில் இருந்து ஊர்வலமாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் துணைமுதல்வர் பன்னீர்செல்வம் உறுதிமொழி வாசிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர். மெரினாவில் திரண்ட கூட்டத்தால் சென்னையில் ஆங்காங்கே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்துகள் வெவ்வேறு வழிகளில் திருப்பிவிடப்பட்டதால் அலுவலகத்துக்கு செல்வோர் அவதிக்குள்ளாகினர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!