நடிகர் விஷால்மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

சென்னை, செம்பியத்தைச் சேர்ந்தவர் தேவராஜன். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் விஷால்மீது புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து தேவராஜன் கூறுகையில், நடிகர் விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவர், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் ஆகியவற்றில் பதவியில் இருக்கிறார். இந்தப்பதவிக்கான தேர்தலில் பணம், தங்கம் மற்றும் மதுபானம் ஆகியவற்றை கொடுத்துதான் நடிகர் விஷால் வெற்றி பெற்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நடிகர் விஷால், நடிகர் சங்கத்துக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் என்ன செய்தார் என்ற கேள்வியும் உறுப்பினர்கள் எழுப்பி உள்ளனர்.

சமூக வலைத்தளத்தில் வெளிவந்த ஒரு தகவல் மூலம் நடிகர் விஷால் இரண்டு சங்க தேர்தல்களிலும் தலா 25 கோடி ரூபாய் பணம் மற்றும் தங்கம் ஆகியவைகளை கொடுத்துதான் வெற்றி பெற்றுள்ளார். 1,200 உறுப்பினர்களைக் கொண்ட தயாரிப்பாளர் சங்கம் மூலம் ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யப்படுகிறது. இதனால் விஷால் தயாரிப்பாளர் சங்கப் பதவியில் தொடர்ந்து நீடித்தால் பல கோடி ரூபாய் ஊழல் செய்யவும், செய்த ஊழலை மறைக்கவும் முயற்சி செய்வார் என்று பேசப்படுகிறது.  எனவே, இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். சங்க உறுப்பினர்களுக்கு பணம், தங்கம் மற்றும் மதுபானங்களைக் கொடுத்த விவகாரத்தில் நடிகர் விஷால்மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!