நிர்மலா சீதாராமனுக்கும் பினராயி விஜயனுக்கும் உள்ள வித்தியாசங்கள் இதுதான்!

கி புயல் தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் சில பகுதிகளைப் புரட்டிப் போட்டது.  குமரி மாவட்டம் சின்னாபின்னமானது. கடலுக்குச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் மாயமானார்கள். மகாராஷ்ட்ர மாநிலத்தில் மட்டும் தமிழகத்தைச் சேர்ந்த 68 படகுகள் கரை ஒதுங்கின. அதில் இருந்த 900 மீனவர்களை மகாராஷ்ட்ர அரசு மீட்டு உதவியது. கடலில் சிக்கி உயிருக்குப் போராடியவர்களை மீட்க, கடற்படை வீரர்கள் கடும் போராட்டம் நடத்தினர். கிழக்குக் கடற்கரைப் பகுதியில் 3 கப்பல்களும் மேற்கு கடற்கரைப் பகுதியில் 4 கப்பல்களும் கடற்படையைச் சேர்ந்த விமானங்களும் மற்றும் ஹெலிகாப்டர்களும் தொடர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுவந்தன. கடற்படை வீரர்கள் தங்கள் உயிரை துச்சமென மதித்துப் போராடி, ஏராளமான மீனவர்களைக் காப்பாற்றினர். கடற்படை வீரர்களின் தீவிர முயற்சியால் மீனவர்கள் பலி குறைந்தது. 

கடற்படை அதிகாரிகளை அவமதித்ததாக குற்றச்சாட்டு

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கன்னியாகுமரி வந்தார். பின்னர், கடற்படை அதிகாரிகளிடம்  மீட்புப்பணிகள்குறித்து கேட்டறிந்தார். பாதுகாப்புத்துறை அமைச்சருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இருந்தார். அப்போது, கடற்படை அதிகாரிகளை நிற்கவைத்து மீட்புப்பணிகள்குறித்து இருவரும் கேட்டறிந்தனர் கேரளாவிலும் இதேபோன்று மீட்புப்பணியில் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகள் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தனர்.    கடற்படை அதிகாரிகளுக்கு உரிய மரியாதை கொடுத்து அமர வைத்து மீட்புப்பணிகள்குறித்து பினராயி விஜயன் அறிந்துகொண்டார்.

தற்போது, இந்த இரு புகைப்படங்களும் மீடியாக்களில் வெளியாகியுள்ளன. கடற்படை அதிகாரிகளை நிற்கவைத்து மீட்புப்பணிகள்குறித்து கேட்டறிந்தற்காக இணையதளத்தில் கண்டனம் குவிந்துவருகிறது. இந்நிலையில் கடற்படை அதிகாரிகளை நிற்கவைத்து பேசியது குறித்து நிர்மலா சீதாராமன் தன் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!