Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'டெங்குனா என்ன சார்?' - கலெக்டரை அதிரவைத்த சிறுமிகளின் கேள்விகள்!

Karur: 

கரூர் மாவட்டத்தில் டெங்குவை ஒழிக்கும்பொருட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் தினம் ஒரு பகுதியாக விசிட் அடித்து, டெங்கு தடுப்புப் பணிகளில் அதிகாரிகளை முடுக்கிவிட்டுவருகிறார். அந்த வகையில் கரூர் பசுபதிபாளையம் பகுயில் டெங்கு தடுப்புப் பணிகள்குறித்து ஆய்வுக்குப் போன மாவட்ட ஆட்சித்தலைவரிடம்,'டெங்குனா என்னா சார்?" என்று இரண்டு சிறுமிகள் கேள்வி கேட்டு கிறுகிறுக்கவைத்தனர்.

கரூர் நகராட்சியில் உள்ள பசுபதிபாளையம் பகுதியில், மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ், டெங்கு தடுப்புப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கெண்டார். அப்போது அவரிடம், அந்தப் பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள்,  'டெங்குனா என்ன...' என்று கேள்வி கேட்க, அதிர்ந்த கலெக்டர், 'டெங்குனா...' என்று தொடங்கி, அந்தச் சிறுமிகளுக்கு பொறுமையாக டெங்குபற்றி விளக்கிக் கூறினார். முடிவில், 'நாங்களும் டெங்குவைத் தடுக்க, எங்க பகுதியை சுத்தமா வச்சுக்குவோம். எங்க ஃப்ரெண்ட்ஸ்கிட்டயும் அவங்க ஏரியாவை சுத்தமா வச்சுக்க சொல்வோம்' என்று அந்தச் சிறுமிகள் சொல்ல, அவர்களைத் தட்டிக்கொடுத்துவிட்டுச் சென்றார்.

அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர், "பசுபதிபாளையம், நேதாஜிநகர், சங்கர்நகர், மேட்டாங்காட்டுத்தெரு ஆகிய பகுதிகளில் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு, சுற்றுப்புறப் பகுதிகளைத் தூய்மையாக வைத்துகொள்ளவும், நிலத்தடித் தண்ணீர்த்தொட்டிகள், நீர் சேமிப்புப் பாத்திரங்களை நன்கு சுத்தம்செய்து மூடிவைக்க பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நாள்தோறும் குப்பைகளை அகற்ற நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. சாக்கடைகளைச் சுத்தம் செய்து,கொசுமருந்து அடிக்கப்பட்டுவருகிறது. மேலும், ரெட்டை வாய்க்கால் தூர்வாரும் பகுதி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேர காய்ச்சல் பிரிவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்தச் சிறுமிகள் எடுத்த டெங்கு தடுப்பு சபதத்தை அனைத்து மக்களும் எடுக்க வேண்டும். அப்போதுதான் முற்றிலும் டெங்கு ஒழியும்" என்றார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement