அம்ருதாவுடன் இருக்கும் முசரஃப் சிக் யார்? தீவிர விசாரணையில் உளவுத்துறை

ஜெயலலிதா மறைந்த பிறகு அவரின் தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைகள் அதிகளவு வெளியே கசிய ஆரம்பித்துள்ளது. ஆனால், ''அ.தி.மு.க என்ற கட்சியையும் இரட்டை இலையையும் 30 ஆண்டுக் காலம் காப்பாற்றி வழிநடத்திய ஜெ.வின் புகழைக் கெடுக்கும் விதமாக வெளியே வரும் சர்ச்சைகளைக் கிள்ளி எறியத் துளியும் ஆர்வம் காட்டவில்லை'' என்ற குற்றச்சாட்டுகள் எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் மீது கட்சி நிர்வாகிகளே ஆதங்கப்பட ஆரம்பித்துள்ளனர். 

கட்சி நிர்வாகிகளின் உணர்வுகளை அறிந்த முதல்வர் எடப்பாடி, யார் அந்த பொண்ணு என்று முதல் முறையாக விசாரித்துள்ளார். உடனடியாக பெங்களூருவில் களம் இறக்கிய அதிகாரிகள் கொடுத்துள்ள அறிக்கையில், அம்ருதாவை வேண்டும் என்றே சிலர் தூண்டி விடுகின்றனர். ஆரம்பத்தில் சைலஜா மகள் என்று அறிமுகமான அம்ருதா இன்று நான் ஜெயலலிதா மகள் என்று டி.என்.ஏ சோதனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் சென்றுள்ளார். 

அம்ருதா

அறிக்கையில், அம்ருதாவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் விசாரணை செய்துள்ளனர். அதில், ''அம்ருதா கன்னடத்தில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அம்ருதா முன்பே திருமணமாகி விவாகரத்து பெற்று சைலஜாவுடன் வாழ்ந்து வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். அம்ருதாவுடன் இளைஞர் ஒருவர் இருப்பதுபோன்ற புகைப்படத்தைப் பற்றியும் விசாரணை செய்துள்ளனர். அந்த இளைஞனின் பெயர் எம்.டி. முசரஃப் சிக். ஆரம்பத்தில் சைலஜா குடும்பத்தில் ஆக்டிங் டிரைவராக வந்துசென்றுள்ளார். சைலஜா, அம்ருதா குடும்பத்தின் இந்து முறைப்படியான வாழ்க்கை முசரஃப் சிக்குப் பிடித்துப் போகவே தன்னையும் ஒரு இந்துவாக மதமாற்றம் செய்துள்ளார். தற்போது அம்ருதா முசரஃப் சிக் பாதுகாப்பில் இருந்துவருகிறார்' என தெரிவித்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!