”விஷால் ஒரு குளத்து ஆமை”: ராதாரவி விமர்சனம்

"விஷால் ஒரு குளத்து ஆமை. நல்லா இருக்கும் இடத்தையும் கெடுத்துவிடுவார்” என ராதாரவி விமர்சித்துள்ளார்.

ராதாரவி- ராதிகா

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் களம் நாளுக்குநாள் சூடுபிடித்துவரும் நிலையில், நடிகர் சங்கப் பொதுச்செயலாளரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், சுயேச்சையாகப் போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல்செய்தார். அவர், வேட்புமனு தாக்கல்செய்த அதேவேளையில், ‘தேர்தலில் விஷால் போட்டியிடுவது, தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் நலனைப் பாதிக்கும்’ என்றுகூறி, இயக்குநர் சேரன் தலைமையில் பல தயாரிப்பாளர்கள், புரொட்யூசர் கவுன்சிலில் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். சென்னை அண்ணா சாலையிலுள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றுவரும் இந்த உள்ளிருப்புப் போராட்டத்தில், தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, பாபு கணேஷ், ராதாகிருஷ்ணன், ஜான் மேக்ஸ் உள்பட பலர் கலந்துகொண்டிருக்கிறார்கள். 

இன்று நடிகர்கள் ராதாரவி, ராதிகா ஆகியோர் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு வந்து, சேரனுக்கு ஆதரவு அளித்துள்ளனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராதாரவி, “விஷால் குளத்து ஆமை மாதிரி. நல்ல இடமாக இருந்தால், அங்கு சென்று அதைக் கெடுத்துவிடுவார். நான் எதிர்க்கும் அளவுக்கு விஷால் ஒன்றும் பெரிய ஆள் இல்லை. அரசியல் கஷ்டம் தம்பி; தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து நல்லது பண்ணு” எனக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!