Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குறை தீர்ப்புக் கூட்டத்துக்கு வரும் மக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் உபசரிப்பு! -ஆச்சர்யமூட்டும் கலெக்டர்

அலைச்சலும் புலம்பலுமாக வரும் மக்களை ஆசுவாசப்படுத்தி, நிலவேம்புக் குடிநீர் கொடுத்து உபசரித்து அனுப்புகிறது, புதுகை சித்தமருத்துவப் பிரிவு.

தமிழ்நாட்டில், எந்த ஆட்சியரகத்திலும் நடக்காத புது முன்னெடுப்பு இது. ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடந்துவருவது அனைவரும் அறிந்த விசயம்தான். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குறைகளோடு வரும் மக்கள் அனைவருக்கும் கடந்த ஆறுமாதங்களாக, 'நிலவேம்புக் குடிநீர் கொடுத்து அசத்துகிறது மாவட்ட சித்த மருத்துவப் பிரிவு.

மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வரும் அதிகாரிகளும் இதை விரும்பி அருந்துகின்றனர். இந்தக் குடிநீரை குடிக்க விரும்புவர்கள், அங்கே இருக்கும் குறிப்பேட்டில் தங்கள் பெயரைப் பதிவுசெய்ய வேண்டும். அதன்பிறகே, அங்கிருக்கும் ஊழியர், சிறிய காகிதக் கப்பில் நிலவேம்புக் குடிநீரைப் பிடித்துத் தருகிறார். "இந்தப் பெயர் பதிவின் மூலமாக எத்தனை நபர்கள் குடிநீர்  அருந்தியிருக்கிறார்கள் என்பதை எங்களால் தெரிந்துக்கொள்ள முடியும். ஒவ்வொரு திங்கள்கிழமையும் சுமார் 100 பேர்களாவது குடித்துப் பயன்பெறுகிறார்கள். டெங்கு காய்ச்சலின் காரணிகளை அடியோடு ஒழிக்கும் திறன், இந்த நிலவேம்புக் குடிநீருக்கு இருப்பது, சித்த மருத்துவத்தில் நிரூபிக்கப்பட்ட விசயம் என்பதால், எங்கள் சித்த மருத்துவத்துறை ஒரு சேவையாகவே இதைச் செய்துவருகிறது" என்றார் அந்தப் பிரிவைச் சேர்ந்த அலுவலர் ஒருவர்.

"இது நல்ல முயற்சி என்பதால், தொடர்ந்து இதை வழங்கும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்" என்றார் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர்.
மற்ற மாவட்ட ஆட்சியரகத்திலும் இதைப் பின்பற்றலாமே!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement