Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''யெஸ் ஐயாம் கான்!''- குஷ்பூ பதிலடி

டிகை குஷ்பூ, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர். மும்பையில் பிறந்த அவரின் இயற்பெயர், நக்கத்கான். தமிழ்ப் படங்களில் குஷ்பூ என்று அறிமுகமாகி, அரசியலிலும் புகுந்தார். சில காலம் தி.மு.க-வில் இருந்த அவர், தற்போது காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகி, செய்தித் தொடர்பாளராக உள்ளார். நெட்டிசன்கள் அடிக்கடி குஷ்பூவைத் தாக்கி ட்விட் செய்வது வாடிக்கை. கடந்த சில நாள்களாக குஷ்பூவை ட்ரோல் செய்துவந்தனர்.

நடிகை குஷ்பூ ட்விட் பதிலடி

குறிப்பாக, மத அடையாளத்தை மறைத்து, குஷ்பூ என்ற பெயருடன் அரசியலில் நுழைந்துள்ளதாக நெட்டிசன்கள் புகார் பட்டியல் வாசித்தனர். நக்கத்கானுக்கு தமிழர்கள் கோயில் கட்டியதாகவும் ஒரு ட்விட் கூறியது.  இன்னோர் ட்விட், குஷ்பூவின் முன்னோர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று சொன்னது. அமைதியாக இருந்த குஷ்பூ, இப்போது பொங்கிவிட்டர். 

நெட்டிசன்களுக்கு குஷ்பூ  கொடுத்த பதிலடியில், ''47 வருடங்களுக்குப் பிறகு சிலர் என் உண்மையான அடையாளத்தைக் கண்டுபிடித்துள்ளனர். ஆஹா... அருமையான கண்டுபிடிப்பு  யெஸ் ஐயாம் கான்... இப்போது அதுக்கென்ன?'' என்று காட்டமாகக் கேட்டுள்ளார். நடிகை குஷ்பூ, இயக்குநர் சுந்தரை மணந்துகொண்டு சென்னையில் செட்டிலாகிவிட்டவர். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement