விஷாலுக்கு எதிராக ஞானவேல் ராஜினாமாவா?

தமிழ்ப் படத்  தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் விஷால், ஆர்.கே.நகர்  இடைத்தேர்தலில் போட்டி என்று இறங்கியதிலிருந்து கவுன்சிலில், கண்டபடி குளறுபடி ஏற்பட்டிருக்கிறது.

'தலைவர் பதவியை விஷால் ராஜினாமா செய்ய வேண்டும்' என்று இயக்குநர் சேரன் திடீரென உள்ளிருப்புப் போராட்டத்தை அறிவித்தார். அதன்பின்பு ராதாரவியும் ராதிகாவும் கவுன்சிலுக்குச் சென்று சேரனுக்கு ஆதரவு தெரிவித்தனர். இப்போது, ஞானவேல் ராஜா ராஜினாமா செய்ய, உடனே விஷாலுக்கும் ஞானவேலுவுக்கும் சண்டை என்று செய்தியைக் கிளப்பிவிட்டனர்.

உண்மையில்,  சினிமா விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தேர்தல் டிசம்பர் மாதம் இறுதியில் நடக்க இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு ஞானவேல் ராஜா போட்டியிடுகிறார். இந்தப் பதவிக்கு போட்டியிடும் நபர்,  இன்னொரு சங்கத்தின் பதவியில் இருக்கக்கூடாது என்பது சட்டவிதி. எனவே, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வகித்துவந்த செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விநியோகஸ்தர் சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார், ஞானவேல் ராஜா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!