எம்.ஜி.ஆர் போஸ்டரில் சிவாஜி பாடல்!

கோவை, ஜமீன் ஊத்துக்குளி பகுதியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக வைத்த பேனர் ஒன்றில் அச்சடிக்கப்பட்டுள்ள வரிகள் தற்போது நெட்டிசன்களின் விமர்சன வலையில் சிக்கியுள்ளது.

எம்.ஜி.ஆர்

கோவையில் பெரும் பரபரப்புக்கு மத்தியில் கடந்த 3-ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. ஒரு பேனரால் ஓர் உயிர் பறிபோனதால் பெரும் விவாதத்துக்கு உள்ளான பேனர், கட்-அவுட் கலாசாரம் தற்போது வேறொரு வகையில் மீண்டும் வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகிவருகிறது.

கோவை,  ஜமீன் ஊத்துக்குளி பகுதியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக ஒரு பேனர் வைத்துள்ளனர். அந்தப் பேனரில் எம்.ஜி.ஆர் புகைப்படத்துடன் 'பொன்மனச்செம்மல் 100' என்ற அடைமொழியுடன் வாழ்த்துப் பாடல் ஒன்றும் அமைந்துள்ளது. அந்த வாழ்த்துப் பேனரில், ‘பார்க்கத் தெரிவதால் பாதை தெரிகிறது... பார்த்து நடப்பதால் பயணம் தொடர்ந்திடும்’ என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளது.
இது நடிகர் சிவாஜி கணேசனின் ‘பலே பாண்டியா’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாழ நினைத்தால் வாழலாம்...’ என்ற பாடலில் இடம்பெறும் வரிகள் ஆகும். ’எம்.ஜி.ஆர். நடித்த நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பல பாடல்கள் இடம்பெற்றிருக்கும்போது அவரை வாழ்த்த சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான பாடல்தான் கிடைத்ததா?’ என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர். மேலும், ' இது சிவாஜி பாடல் இல்லை, கண்ணதாசனின் பாடல்' என பதில் கவுன்ட்டர் கொடுத்து வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!