வெளியிடப்பட்ட நேரம்: 14:47 (05/12/2017)

கடைசி தொடர்பு:15:26 (05/12/2017)

மணல் மீதான தடையை நீக்க முடியாது! - அரசின் கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம்

மணல் குவாரிகள் அமைக்கத் தடை போட்ட உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, தங்கள் வாதங்களைக் கூறி தடை கேட்டது தமிழக அரசு. தடை வழங்க முடியாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று மறுத்துவிட்டது. 

madurai hc
 

தமிழகத்தில் உள்ள அனைத்து  மணல் குவாரிகளையும் 6 மாதத்துக்குள் மூட வேண்டும். ஜல்லியைத் தவிர கிரானைட் குவாரி  உள்ளிட்ட பிற கனிமக் குவாரிகளைப் படிப்படியாக மூட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை  எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் குமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் மனு தாக்கல்செய்யப்பட்டது.
'தமிழகத்தில் உள்ள அனைத்து  மணல் குவாரிகளையும் 6 மாதத்துக்குள் மூட வேண்டும். தமிழகத்தில் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்கும்பொருட்டு ஜல்லியைத் தவிர கிரானைட் குவாரி  உள்ளிட்ட பிற கனிமக் குவாரிகளைப் படிப்படியாக  மூட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளிலிருந்து இயற்கை மணலை இறக்குமதி  செய்ய ஏதுவாக, தமிழக அரசு தேவையான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்' என்று நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.  மலேசியாவிலிருந்து இறக்குமதிசெய்யப்பட்ட இயற்கை மணலை, தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து  வாடிக்கையாளர்களிடம் கொண்டுசேர்க்க அனுமதி அளிக்க வேண்டும் என ராமையா என்பவர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல்செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், இறக்குமதிசெய்யப்பட்ட மணலை கொண்டுசெல்ல அனுமதி வழங்கி மேற்கண்ட உத்தரவை வழங்கினார். இந்த நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை ரத்துசெய்யக் கோரி குமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் மனு தாக்கல்செய்யப்பட்டது. 

இந்த மனு இன்று "நீதிபதிகள் கல்யாணசுந்தரம் , கிருஷ்ணவள்ளி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் மணல் குவாரிகளை மூடுவாதால் தமிழகத்தில் மணல் தட்டுபாடு ஏற்படும் சூழல் உருவாகும்,சாலை அமைப்பது, மேம்பாலம் அமைத்தல்,அணைகள் கட்டுதல் போன்றவை பாதிக்கபடும்,மேலும் மலேசியா மணலில் சிலிக்கான் அளவு அதிகமாக இருப்பதால் அம்மணல் கட்டுமானத்திற்கு பயன்னற்றதாக இருக்கும் என்றனர், எதிர்மனுதாரர் தரப்பில் காலஅவகாசம் கேட்டதால் வழக்கினை டிசம்பர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்  .