பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2.9%, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 13.6% அதிகரிப்பு

வ்வொரு வருடமும் அதற்கு முந்தைய வருடத்தில் பதிவுசெய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கைத் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தால் வெளியிடப்படும். அதன்படி 2016-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட குற்றங்களுடைய புள்ளி விவரங்களைத் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கிறது. கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் 2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டப் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்களின் எண்ணிக்கை 3% குறைந்திருந்தது. ஆனால், கடந்த வருடம் மீண்டும் 2.9% அதிகரித்திருக்கிறது. மேலும், கடந்த வருடம் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும் 13.6% அதிகரித்திருக்கிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெரும்பாலும் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி, மஹாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அதிக அளவிலான குற்றங்களுடன் முன்னணியில் இருக்கின்றன. இந்தியாவில் இருக்கும் 19 நகரங்களில் டெல்லி பாலியல் குற்றங்கள், ஆள் கடத்தல், ஆசிட் வீச்சு என்று எல்லாவகை குற்றங்களிலும் முதலிடத்தில் இருக்கிறது. சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களுக்கு கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றங்களில் சென்னை முதல் இடத்தில் இருக்கிறது. இவற்றில் பெரும்பாலான குற்றங்கள் இருசக்கர வாகனச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவை என்றும் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தில் இருந்து தெரிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!