மத நல்லிணக்கத்துக்கு ஜாகீர்கான் சிறந்த உதாரணம்!

ந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஜாகீர்கான் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். அவரின் மனைவி ககாரிகா காடேஜ், இந்து மதத்தைச் சேர்ந்தவர். கலப்புத் திருமணம் ஆகும். இருவருமே நீண்ட காலம் காதலித்து வந்தனர். யுவராஜ் சிங், திருமணத்தில் ஜோடியாகவே பங்கேற்றனர். திருமணம் நடந்த விதம்கூட எந்த மதத்தையும் அடையாளப்படுத்தவில்லை. 

ஜாகீர்கான் தம்பதி

இந்நிலையில், புதுடெல்லி கோல்காபூர் மாகாலட்சுமி கோயிலுக்குப் புதுமணத் தம்பதியர் நேற்று இரவு சென்று சிறப்பு வழிபாடு நடத்தி, இருவருமே சாமி கும்பிட்டனர். அப்போது,  ஜாகீர்கான் தன் நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்துக்கொண்டார். ஜாகிர்கான் நெற்றியில் பொட்டு வைத்திருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் பரவியதால், `இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் எப்படி பொட்டு வைக்கலாம்' என சர்ச்சை எழாமலும் இல்லை!

''உண்மைக் காதலுக்கு மதமாற்றம் தேவை இல்லை. இருவருமே பரஸ்பரம் அவரவர் மதங்களுக்கும் நம்பிக்கைக்கும் மரியாதை அளித்தாலே போதுமானது. அந்த வகையில், தன் வாழ்க்கைத் துணைவியின் நம்பிக்கையை மதித்து ஜாகீர்கான் மதித்து பொட்டு வைத்துள்ளார். இதில், சர்ச்சைக்கு எங்கே இடம் இருக்கிறது?'' என ஜாகீர்கானுக்கு ஆதரவாகவும் குரல் எழுந்துள்ளது. 

இன்னும் சிலர் மதநல்லிணக்கத்துக்கு ஜாகீர்கான் சிறந்த உதாரணம் என்று அவரைப் பாராட்டியுள்ளனர். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!