மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராமம்! திரையரங்கு பார்க்கிங் கட்டணத்தை நிர்ணயித்தது தமிழக அரசு!

மாநகராட்சிப் பகுதிகளிலுள்ள திரையரங்குகளில் காருக்குக்  கட்டணமாக 20 ரூபாயும் இரு சக்கர வாகனக் கட்டணமாக 10 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


தமிழகம் முழுவதுமுள்ள திரையரங்குகளுக்கான கட்டணத்தைத் தமிழக அரசு சமீபத்தில் நிர்ணயித்தது. தற்போது, திரையரங்குகளுக்கான பார்க்கிங் கட்டணத்தை நிர்ணயித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, `மாநகராட்சி மற்றும் சிறப்பு நிலை நகராட்சிகளில் உள்ள திரையரங்குகளில் கார் மற்றும் ஆட்டோக்களுக்கு 20 ரூபாயும் இரு சக்கர வாகனங்களுக்கு 10 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நகராட்சிப் பகுதிகளில் உள்ள திரையரங்கங்களில் கார் மற்றும் ஆட்டோக்களுக்கு 15 ரூபாயும் இரு சக்கர வாகனங்களுக்கு 7 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகர பஞ்சாயத்து மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் கார், ஆட்டோக்களுக்கு 5 ரூபாயும் இரு சக்கர வாகனங்களுக்கு 3 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்துப் பகுதிகளிலும் சைக்கிளுக்கு இலவசம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!