கொள்ளையர்களிடமிருந்து மண்ணைக் காப்போம்! #WorldSoilDay

ண் வகைகள் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி டிசம்பர் 5-ம் தேதி உலக மண் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களில் 95 சதவிகிதம் மண்ணில் இருந்து கிடைப்பவைதான். இந்த பூமியின் ஆதாரமே மண்தான். பெய்யும் மழை நீரை உறிஞ்சி நிலத்தடி நீராக நமக்குத் தருவதும் மண்தான்! இறந்த பின்னும் மண்ணில்தான் நாம் புதைக்கப்படுகிறோம். 'தாய்மண்' என்று சொல்லும்போதும் ஒருவித பெருமிதம் கொள்வோம். 

உலக மண் தினம்

அத்தகைய , மண்ணைக் காப்பதற்கான அவசியத்தை வலியுறுத்தும் வகையில், தாய்லாந்து நாட்டின் மறைந்த மன்னர் பூமிபால் அதுல்யாதேஜ் பிறந்த தினத்தைதான் உலக மண் தினமாகக் கடைப்பிடிக்கிறோம். இப்படி ஒரு நாளை உருவாக்கியது அவர்தான். இந்தியாவில் வண்டல் மண், கரிசல்மண், செம்மண், பாலைவன மண், கடற்பகுதி மண், காட்டு மண், சதுப்பு நில மண் என ஏராளமான வகைகள் உள்ளன.

நதிகள் பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகே ஒரு சதுர அடி மணலை உருவாக்க முடியும். நதிகளின் அருமை தெரியாமல் மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. மனிதனால் உருவாக்கி விடவே முடியாத ஒரு பொருள் மண். அத்தகைய, மண், மணல் கொள்ளையைத் தடுப்பது அவசியமானது. எனவே, கொள்ளையர்களிடமிருந்து மணலையும் மண்ணையும் காப்போம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!