Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எல்லை தாண்டும் படகுகளைப் பறிமுதல் செய்யும் திட்டத்தை விரைவில் அமல்படுத்துவோம்! இலங்கை அமைச்சர் பேச்சு

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறுகின்ற இந்திய மீனவர்களைக் கைது செய்தும், அவர்களிடமிருந்து அபராதம் பெற்றுக்கொள்வதோடு படகுகளையும் பறிமுதல் செய்யும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட இருப்பதாக இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு மீன்வளத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அதிரடியாக அறிவித்துள்ளார். 

இலங்கை  நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்று வருகின்ற அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இந்த அறிவிப்பை வெளியிட்டார். அவர் பேசுகையில், ''இருநாட்டு மீனவப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு இந்திய அரசுடன் நட்புறவுடன்கூடிய பேச்சு நடத்தப்படுவதாகவும் அத்துமீறுகின்ற இந்திய மீனவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையும் படகுகளைப் பறிமுதல் செய்கின்ற நடவடிக்கையும் தொடர்ந்து இடம்பெறும். எதிர்வரும் காலங்களிலும் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு அபராதம் விதித்து, அவர்களிடமிருந்து படகுகளைப் பறிமுதல் செய்யவும் நாங்கள் ஆவலோடு  உள்ளோம்’’ என்றார்.   

இலங்கை அமைச்சர் மஹிந்த அமரவீர

இந்நிலையில், இலங்கைக் கடற்படை இந்த ஒரு வருடத்தில் மட்டும் 344 இந்திய மீனவர்கள் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடிப்பதாகத் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தொடர்சியாகக் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இன்று வரை 344 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக, 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 64 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில், 224 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். தற்போது, 120  மீனவர்கள் யாழ்ப்பாணம்  சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என இலங்கை கடற்படைத் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement