Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குப்பைக் கிடங்கிலிருந்து குடிநீர் சப்ளை! கொதிக்கும் போராட்டக் குழு

தேவகோட்டை ரஸ்தா பகுதியில் குப்பைகிடங்கையும் புதிதாக வரவிருக்கும் கழிவுநீரேற்று நிலையத்தையும் வேறு இடத்துக்கு மாற்றக்கோரி உள்ளிருப்புப் போராட்டம் செய்தவர்களை போலீஸ் கலைத்திருக்கிறது. எங்கள் பகுதிக்கு இந்த இரண்டும் இருப்பது ஆபத்து தொற்றுநோய்கள் பரவுகிறது. ஆகையால் எங்களுக்கு அந்த இடத்தில் நிரந்தமான தீர்வு வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் லதாவிடம் புகார் அளித்திருக்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

இது குறித்து இப்போராட்டத்தை வழிநடத்தி வரும் முதன்மை ஒருங்கிணைப்பாளர் பாண்டிமீனாள் பேசும்போது, “கடந்த இருபது ஆண்டுகளாகத் தேவகோட்டை ரஸ்தா பகுதியில் இருக்கும் குப்பை கிடங்கை அப்புறப்படுத்த பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இந்தக் குப்பை கிடங்கைச்சுற்றி 6 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இதுபோக பழைய செஞ்சை சங்கராபுரம் சங்கத் திடல், காந்திநகர் நகாவயல்ரோடு வசந்தம்நகர், தேவகோட்டை  ரஸ்தா வாரிவயல் போன்ற கிராமங்களும் இக்குப்பை மேட்டை சுற்றியே அமைந்துள்ளது. இந்தக் குப்பைகிடங்குக்குள் இரண்டு ஆழ்குழாய் கிணறு மற்றும் ஆர்ட்டீசியன் ஊற்று ஆகியவற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் காரைக்குடி காதிநகர் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், இந்தக் குடிநீரை பயன்படுத்தக் கூடாது என்று காரைக்குடி நகராட்சிக்கு மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் இதைக் கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் நகராட்சி நிர்வாகம் இந்தக் குடிநீரைப் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது இந்தக் குடிநீரை அருந்தி வருவதால் பல்வேறு வகையான தொற்று நோய்கள் ஏற்பட்டு மர்மகாய்ச்சலால் பல உயிர் இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

மேலும், நிலத்தடி நீரை மாசுப்படுத்தும் விதமாகத் தற்போது குப்பைக் கிடங்கின் அருகில் காரைக்குடி நகராட்சி பாதாளச்சாக்கடை திட்டத்தின் கீழ் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகின்றது. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமையும் இடத்துக்கு அருகில் தேசிய நெடுஞ்சாலை சர்ச் கோயில் ரயில் நிலையம் குடியிருப்புகள் என இருக்கிறது. அதேநேரத்தில் காரைக்குடிக்குள் இருந்து கொண்டுவரப்படும் கழிவு நீர்கள் இரண்டு பெரிய கால்வாய்கள் ஒரு ஆறு இவற்றை கடந்து இங்கே வருகிறது. பல ஆண்டுகளாகக் குப்பை அகற்றப்படாமல் மரமே முளைத்திருக்கிறது. பசுமைதீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தோம். ஆனால், தவறான தகவல்களைத் தீர்ப்பாயத்துக்கு கொடுத்திருக்கிறார்கள் அதிகாரிகள். எனவே, நியாயமான நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியில் பொதுமக்கள் தூய்மையாக வாழ வழிவகுக்க வேண்டும் என்று மனு கொடுத்திருக்கிறோம். நல்ல பதிலை எதிர்நோக்கி இருக்கிறோம். இல்லையென்றால் எங்கள் போராட்டம் மீண்டும் தொடரும்'' என்கிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement