Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'பட்டா வழங்கியும் நிலத்திற்குள் செல்ல முடியவில்லை'- 13 ஆண்டுகளாகத் தொடரும் அவலம்

சேலம் மாவட்டத்தில் உள்ள அன்னதானப்பட்டி பகுதியில் இருக்கும் வீடு இல்லாத 240 தலித் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கியும் அந்த நிலத்திற்குச் சென்று, வர வழியில்லாததால் 13 ஆண்டுகளாக அந்த மக்கள் தங்களுடைய வீட்டுமனைக்குள் கால் வைக்க முடியாத  சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

இது குறித்து பரமேஸ்குமார் கூறுகையில், ''சேலம் அன்னதானப்பட்டி பகுதிகளில் வீடு இல்லாத 240 தலித் சமுதாய குடும்பத்திற்கு  தமிழக அரசு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் சீரகாப்பாடி விநாயகா மிஷின் பின்புறத்தில் ஒதுக்கியது. 2004ல் ஆதிதிராவிட நலத்துறை மூலமாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 800 சதுர அடி வீதம் பிரித்து பட்டா வழங்கியது.

ஆனால், பட்டா வழங்கியது முதல் இன்று வரை அந்த நிலத்திற்குள் தாழ்த்தப்பட்ட மக்களாகிய நாங்கள் உள்ளே செய்ய முடியவில்லை. காரணம் நான்கு புறமும் பட்டா நிலமாக இருப்பதால் எங்க வீட்டு மனைக்குள் உள்ளே செல்ல வழியில்லை என்று சுற்றியிருப்பவர்கள் அனைவரும் வழி விடுவதில்லை. சம்பந்தப்பட்ட ஆதிதிராவிட நலத்துறையில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாய்மொழியாக உங்க வீட்டுமனை பட்டா உள்ள நிலத்திற்குச் சென்றுவர 12 அடி வீதியிருக்கிறது என்று மட்டும் சொல்லுகிறார்கள். அது எங்கிருக்கிறது. யார் ஆக்கிரமித்து வைத்திருக்கிறார் என்று எதுவும் சொல்லுவதில்லை. வெளியில் சமுதாயத்தில் சாதிய பாகுபாடு பார்க்கிறார்கள் என்றால் அதிகாரிகளும் சாதிக் கண்ணோட்டத்தில் இருக்கிறார்களோ என்று அச்சப்பட தோன்றுகிறது.

கடந்த 13 ஆண்டுகளாக எங்களுடைய பட்டா நிலத்திற்குள் நாங்கள் கால்வைக்ககூட முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. வீடு இல்லாத வாடகை வீட்டிலும், புறம்போக்கு நிலத்திலும் குடிசை போட்டு வாழ்ந்துகொண்டிருக்கும் நாங்கள் எங்களுடைய சொந்த நிலத்தில் குடிசை போட்டு குடியிருக்கலாம் என்றால் நடப்பதற்கே வழிவிடாத போது வண்டிகளை எப்படி உள்ளே விடுவார்கள் என்று நாங்களும் 13 ஆண்டுகளாகப் பொறுத்துப் பார்த்து விட்டோம். இனியும் அரசு எங்களுக்கு வழிவகை செய்யவில்லை என்றால் நாங்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகத்தில் மூட்டை, முடிச்சுகளோடு குடியேற வேண்டிய சூழ்நிலைதான் உருவாகும். அதனால் எங்கள் புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு வழிவகை செய்து கொடுக்க வேண்டும்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement