Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமைச்சர் செல்லூர் ராஜூ வழியில் ரயில்வே துறை!

Coimbatore: 

கோவை – பெங்களூர் இடையேயான டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று இரண்டாவது கட்டமாக சோதனை ஓட்டம் செய்யப்பட்டது.

டபுள் டக்கர்

கோவை – பெங்களூர் இடையே டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்திருந்தது. இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல் கட்ட சோதனை நடைபெற்றது. அப்போது, தொழில்நுட்ப ரீதியில் பெங்களூரிலிருந்து கோவை வருவதில் ஏதாவது சிக்கல் உள்ளதா என ஆய்வுசெய்யப்பட்டது. முழு பெட்டிகள் வந்தவுடன் முழுமையான சோதனை ஓட்டம் நடைபெறும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று இரண்டாவது கட்ட சோதனை நடைபெற்றது. காலை 10.20 மணிக்கு கோவை வந்த ரயில், மதியம் 12.20 மணி அளவில் பெங்களூர் புறப்பட்டது. இந்தச் சோதனையின்போது, ரயில் பெட்டியில் பயணிகள் பயணிப்பது போலவே எடைகூட்ட தண்ணீர் கேன்கள் ஏற்றப்பட்டிருந்தன. 

டபுள் டக்கர்

அதேபோல, தொழில்நுட்ப ரீதியில் ரயில் எப்படி இயங்குகிறது என்பதைக் கண்காணிக்க, சி.சி.டி.வி கேமரா பொறுத்தப்பட்டிருந்தது. முக்கியமாக, நடைமேடையில் ரயில் பெட்டிகள் உரசுகிறதா என்பதை அறிந்து அதைத் தடுப்பதற்கான மாற்று வழிகளை மேற்கொள்ள ரயிலின் இருபுறமும், தெர்மாகோல் ஒட்டப்பட்டது. உராய்வுகள் ஏற்படுகிறதா என்பதை அறிய தெர்மாகோலின் மீது பெயின்ட் அடிக்கப்பட்டது. வைகை நதி விவகாரத்தில், தெர்மாகோல் பயன்படுத்தி, நெட்டிசன்களிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ சிக்கிய நிலையில், தற்போது ரயில்வே துறையும் தெர்மாகோல் ட்ரெண்டை பின்பற்றியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement