சர்ச்சையை ஏற்படுத்தும் செல்லூர் ராஜூவின் ஊர்வலம்!

ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நடத்திய ஊர்வலம் பல தரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சையை ஏற்படுத்திய

ஜெயலலிதாவின் ஓராண்டு நினைவு தினத்தை சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி உட்பட அமைச்சர்கள் அமைதி ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்திய நிலையில், மதுரையில் தான் நடத்தும் நினைவு ஊர்வலம் பிரமாண்டமாக இருக்க வேண்டுமென திட்டமிட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, நகரின் முக்கியமான வர்த்தகப் பகுதியான நான்கு மாசி வீதிகளிலும் ஊர்வலம் நடத்த ஏற்பாடுசெய்தார். இதனால், நேற்று மாலை நான்கு மணி முதல் மாசி வீதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஊர்வலத்தை பிரமாண்டமாக காட்ட மதுரையிலுள்ள அரசு மற்றும் தனியார் பெண்கள் கல்லூரியிலிருந்து மாணவிகளை அழைத்து வர கல்லூரி நிர்வாகிகள் மூலம் கட்டாயப்படுத்தி ஏற்பாடு செய்தனர்.  அப்போது, வாகனத்தில் ஜெயலலிதாவின் பொம்மையை படுக்க வைத்த நிலையில் இழுத்துச் சென்றனர். 

கடந்த முறை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். அணியினர் ஓட்டு கேட்கச் சென்றபோது ஜெயலலிதாவின் இறந்தது போன்ற பொம்மை உடலை ஊர்வலம் போல கொண்டுசென்றதை எடப்பாடி அணியினர் கடுமையாக விமர்சித்தனர். தற்போது எடப்பாடி அணியைச் சேர்ந்த அமைச்சர் செல்லூர் ராஜூ, தான் ஏற்பாடு செய்த அமைதி ஊர்வலத்தில் அதேபோல செய்து பொதுமக்களின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!