`விஷால் இன்று முளைத்த காளான்..!' - செல்லூர் ராஜூ

மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசும்போது, `புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக அமைச்சர்கள் முகாமிட்டு நிவாரணப் பணியாற்றிவருகின்றனர். மத்திய அரசும் அமைச்சரை அனுப்பி விரைந்து நடவடிக்கை எடுத்துவருகிறது' என்றவர், நடிகர் விஷாலின் வேட்புமனு தள்ளுபடிசெய்யப்பட்டு, பின் பெறப்பட்டு, மீண்டும் நிராகரிக்கப்பட்டதைப் பற்றி கேட்டதற்கு,  `நடிகர் விஷால் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான். அவரைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எங்களுடைய வலிமைக்குத் தகுந்த ஒரே எதிரி தி.மு.க. மட்டுமே'  என்று கூறினார்.

விஷால் நேற்று

அவர் தலைமையில் நேற்று நடந்த ஊர்வலத்தில், அ.தி.மு.க தொண்டர்களைவிட கல்லூரி மாணவ மாணவிகள்தான் அதிகம் வந்திருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!