வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (06/12/2017)

கடைசி தொடர்பு:13:27 (06/12/2017)

உலகத்திலேயே இவர்தான் அழகாம்! கொண்டாடும் 5.2 லட்சம் ஃபாலோயர்கள்

லக அழகியாக மனுஷி சில்லர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 'உலகத்திலேயே இந்த பொண்ணுதான் ரொம்ப அழகு' என்று இன்ஸ்ட்ராகிராமில் லட்சக்கணக்கானோர் கொண்டாடிவருகின்றனர். ரஷ்யாவைச் சேர்ந்த குழந்தை மாடலான அனாஷ்தியாவுக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 5.2 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர். தற்போது, அனாஷ்தியாவுக்கு 6 வயதுதான் ஆகிறது. இன்ஸ்டாகிராம் பக்கம், அவரின் தாயார் அன்னா பெயரில் உள்ளது. ப்ளூ கலர் கண்களுடன் மனதைக் கொள்ளைகொள்ளும் அழகுடன் அனாஷ்தியா இருக்கிறார். விதவிதமாக உடைகள் அணிவது அனாஷ்தியாவுக்கு மிகவும் பிடித்த விஷயம். 

உலகிலேயே அழகான பெண்

அனாஷ்தியாவின் புகைப்படத்தை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றுவார் தாயார். அடுத்த நிமிடமே ஆயிரக்கணக்கான லைக்குகள், கமென்ட்டுகள் வந்து குவிய ஆரம்பித்துவிடும். பிரபல குழந்தைகள் ஆடை நிறுவனமான Chobi Kids-க்கு அனாஷ்தியாதான் ஆஸ்தான மாடல். அனாஷ்தியாவுக்கு முன்னதாக 16 வயது பிரான்ஸ்  மாடல் தைலானே பிளான்டேவோ உலகிலேயே மிக அழகான பெண்ணாகக் கருதப்பட்டார்.  அனாஷ்தியா வயதில், தைலானே பிளான்டேவோ குழந்தைகள் இதழான Vogue Enfants - இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்றவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க