`எனக்குப் பின்னால் இவர்கள் இல்லை!’ - கொந்தளித்த விஷால்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு விஷால் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது பற்றி நடிகர் விஷால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

vishal
 

அப்போது பேசிய அவர், `நேற்று இரவு என் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தேர்தல் அதிகாரி அறிவித்தார். உடனே அங்கிருந்தவர்கள் கைத்தட்டி ஆராவாரம் செய்தனர். வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்து மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். இதற்கான வீடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இரண்டு மணிநேரத்தில் என் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கின்றனர். என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. இது எனக்கு எதிரான செயல் அல்ல. ஜனநாயகத்துக்கு எதிரான செயல். நான் எந்தக் கட்சியியையும் சார்ந்தவன் இல்லை. அப்படியிருந்தும் இவ்வளவு எதிர்ப்புகள் ஏன். மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் இவ்வளவு பிரச்னை வருமா. எனக்கு நடந்த அநீதிக்கு ஆர்.கே.நகரின் மண்டல அலுவலர் பதில் சொல்ல வேண்டும். என் வேட்புமனுவில் என் பெயரை முன்மொழிந்து பின்னர் பின்வாங்கிய சுமதி என்னும் பெண் மிரட்டப்பட்டுள்ளார். அவரை இதற்குமேல் யாரும் தொல்லை செய்ய வேண்டாம் விட்டுவிடுங்கள். என் மனு நிராகரிக்கப்பட்டுவிட்டது. அவ்வளவுதான்’ என்றார் விரக்தியுடன்.

பின்னர் ஆர்.கே.நகரில் உள்ள தெலுங்கு பேசும் வாக்காளர்களைக் குறிவைத்து, தினகரன் உங்களைக் களமிறக்கி இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதே என்று செய்தியாளர்கள் விஷாலிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த விஷால் ‘நான் இந்தியனாக இங்கு போட்டியிடுகிறேன். ஜாதி, மொழி இவை அனைத்தையும் கடந்த ஒரு இந்தியனாக இங்கு போட்டியிடுகிறேன். நான் படித்த பள்ளியில் பிரிவினைகள் பற்றி சொல்லிக் கொடுக்கப்படவில்லை. எனக்குப் பின்னால் தினகரனோ திமுகவோ கமலோ செயல்படவில்லை. நான் தனித்துப் போட்டியிடுகிறேன்’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!