வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (06/12/2017)

கடைசி தொடர்பு:15:15 (06/12/2017)

ஆளும் கட்சியின் உத்தரவுப்படியே தேர்தல் அலுவலர் செயல்படுகிறார்..! மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

'ஆளும் கட்சியின் உத்தரவுப்படியே தேர்தல் அலுவலர்கள் செயல்படுவார்கள் என்பது விஷால் விவகாரத்தில் தெளிவாகியுள்ளது' என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'வரும் 11-ம் தேதி நடைபெறும் பரப்புரையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள். ஆளும் கட்சியின் உத்தரவுப்படியே தேர்தல் அலுவலர் செயல்படுவார் என்பது விஷால் விவகாரத்தில் தெளிவாகியுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரியை மாற்ற வேண்டும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நேர்மையான முறையில் நடத்துவதற்குத் தேர்தல் ஆணையம் நேர்மையாகச் செயல்பட வேண்டும்' என்றார்.