பொதுமக்களை அச்சுறுத்தும் அதிகாலை முகமூடி கொள்ளையர்கள்!

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகக் கொள்ளைச் சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுகின்றன. முகமூடி அணிந்த கொள்ளையர்கள் இதில் ஈடுபடுவதாகத் தகவல் வெளியானது. ஆனால், இது உறுதிப்படுத்த முடியாதத் தகவல்களாக இருந்து வந்தன.இந்நிலையில், புன்னைநல்லூர் ஞானம் நகரைச் சேர்ந்த சண்முகம் என்பவர் வீட்டில் முகமூடி கொள்ளையர்கள் நடத்திய தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம் இப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதிகாலையில் சண்முகத்தின் வீட்டு வாசல் கதவு தட்டப்படும் சப்தம் கேட்டு, இவரின் மகன் விநாயகம் கதந்த் திறந்துள்ளார். கைகளில் கத்தியுடன் முகமூடி அணிந்த 5 பேர் நின்றுள்ளார்கள். அதிர்ச்சி அடைந்த விநாயகம் அலறியிருக்கிறார். இவரது அலறல் சத்தத்தைக் கேட்டு, சண்முகமும் இவரின் மனைவியும் ஓடி வந்துள்ளார்கள். சண்முகத்தைக் கத்தியால் குத்திய கொள்ளையர்கள், சண்முகத்தின் மனைவி அணிந்திருந்த 5 சவரன் தங்க நகையைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடியிருக்கிறார்கள். பொதுமக்கள் அவர்களை விரட்டிச் செல்ல, கொள்ளையர்கள் 5 பேர் சமுத்திரம் ஏரியில் குதித்து தப்பிக்க முயன்றுள்ளார்கள். ஏரியைப் பொதுமக்கள் சுற்றி வளைத்து தேடியதில் இரண்டு பேர் மட்டும் சிக்கியுள்ளார்கள். இவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முகமூடி கொள்ளையர்கள் சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து தஞ்சையில் பல இடங்களில் உலவுவதாகத் தகவல் பரவியுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளார்கள்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!