ஹுசைனைத் திருமணம் செய்த தொகுப்பாளினி மணிமேகலை

சன் மியூசிக்கில் பிரபலமான வீஜேக்களுள் ஒருவர் மணிமேகலை. இவருக்கென்று  ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இப்போதும் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கும் இவரின் நெருங்கிய நண்பரான ஹுசைனுக்கும் சென்னையில் நண்பர்கள் மற்றும் ஹுசைனின் உறவினர்கள் முன்னிலையில் இன்று ரிஜிஸ்டர் மேரேஜ் நடைபெற்றுள்ளது.

வீஜே மணிமேகலை

அவரது ட்விட்டரில், ''எவ்வளவு போராடியும் என்னுடைய தந்தையின் மனதை என்னால் மாற்ற முடியவில்லை. அதனால் என்னுடைய குடும்பத்தை எதிர்த்து இன்று என் காதலனை கரம் பிடித்துள்ளேன். என்றைக்காவது ஒருநாள் என்னுடைய அப்பா எங்களை ஏற்றுக் கொள்வார்'' எனப் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து மணிமேகலையிடம் பேசியபோது, ''நாங்க ரெண்டு பேரும் எங்க வீட்டோட சம்மதத்துக்காக ரொம்ப நாள் போராடினோம். திடீர்னு முடிவு பண்ணி இன்னைக்கு நாங்க ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம். கொஞ்ச நாளிலேயே என்னுடைய அப்பா எங்களை புரிஞ்சிப்பாங்கனு நம்புறேன்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!