வெளியிடப்பட்ட நேரம்: 17:49 (06/12/2017)

கடைசி தொடர்பு:17:49 (06/12/2017)

சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜயகாந்த்தின் புதிய புகைப்படம்!

மருத்துவ சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் சென்றுள்ள தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது. 


உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த், ஏற்கெனவே சிங்கப்பூர் சென்று சிகிச்சைபெற்று வந்திருந்தார். ஆனால், விஜயகாந்த்துக்கு பேசுவதில் தொடர்ந்து சிரமம் இருந்துவந்தது. இந்தநிலையில், கடந்த 28-ம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் சென்றிருந்த நிலையில், அங்கு அவர் ஹோட்டல்களில் விஜயகாந்த் இருக்கும் போட்டோக்கள் வெளிவந்து சமூக வலைதளங்களில் வைரலாகியது.

தற்போது, சிகிச்சைப் பெறும் உடை அணிந்து மருத்துவமனை ஊழியருடன் விஜயகாந்த் நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படம் தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.