வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (06/12/2017)

கடைசி தொடர்பு:19:53 (06/12/2017)

தமிழை மீட்ட புதுக்கோட்டை மக்கள்..! தமிழில் பெயர் மாறிய ரயில் நிலையம்!

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ரயில் நிலையத்தின் பெயர் பராமரிப்புப் பணிகளின் போது தமிழிலிருந்து இந்திக்கு மாறியிருந்தது. இதற்காகப் பெயர் பலகையை மாற்றிய போதே புதுக்கோட்டை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

"புதுக்கோட்டை  ரயில் நிலையம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறதா?" என்ற தலைப்பில் விகடன் இணையதளத்தில் செய்தி வெளியாகியிருந்தது. இதற்கு மக்கள் அதிக அளவில் ஆதரவை சமூக வலைதளங்கள் மூலமாகப் பதிவு செய்திருந்தனர். தமிழை மீட்டு பிரதான வாயிலுக்குக் கொண்டுவர மக்கள் போராட்டம் தொடரும் என்றும் பதிவுகளில் குறிப்பிட்டிருந்தனர்.

 

 

இந்நிலையில் மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக புதுக்கோட்டை ரயில் நிலையத்தின் பிரதான வாயிலில் பெயர்பலகை மீண்டும் தமிழுக்கு மாறியுள்ளது. இந்தி இருந்த இடத்தில் மீண்டும் தமிழ் இடம்பிடித்திருக்கிறது. போராட்டம் மூலம் பிரதான வாயிலில் தமிழ்  மீண்டும் இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.