Published:Updated:

`ஒரே நாளில் 3 வயதுக் குழந்தை உட்பட 11 பேர் காயம்! - தெரு நாய்களால் தேனி மக்கள் அச்சம்

சுற்றித்திரியும் வெறி நாய் கடித்து நேற்று ஒரே நாளில் 3 வயதுக் குழந்தை உட்பட 11 பேர் காயமடைந்தனர்.

Street Dogs
Street Dogs

தேனி மாவட்டத்தின் பிரதான பகுதிகளான தேனி பங்களாமேடு, சுப்பன்தெரு, திட்டச்சாலை ஆகிய பகுதிகளில் சுற்றித்திரியும் வெறிநாய் கடித்து நேற்று ஒரே நாளில் 3 வயதுக் குழந்தை உட்பட 11 பேர் காயமடைந்தனர். தெரு நாய்களைக் கட்டுப்படுத்தாத நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மீது மக்கள் கோபமடைந்துள்ளனர்.

Street Dogs
Street Dogs

தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது அனுஸ்ரீ மீது பாய்ந்த வெறிநாய், அவரின் முகத்தைக் கடித்தது. ரத்த வெள்ளத்தில் விழுந்த அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன்னர், அடுத்தடுத்து தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்த பலரும் நாய் கடிக்கு ஆளானார்கள்.

நேற்று இரவு மட்டும் முருகன் (வயது 57), பிரியங்கா (வயது 9), விவின் சாஸ்தா (வயது 9), ரிஷிகா (வயது 4), புஸ்பம் (வயது 48), பாண்டியராஜன் (வயது 40), ரமேஷ் (வயது 38), தேஜஸ்வின் (வயது 4), புவமித்ரா (வயது 12), ஸ்ரீ ஆண்டாள் (வயது 4), சமித்ரா (வயது 13) ஆகியோர் வெறி நாய் கடிக்கு ஆளானார்கள். அனைவரும் கானாவிலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Anu Sri
Anu Sri

இதில் முகத்தில் காயமடைந்த 3 வயதுக் குழந்தை அனுஸ்ரீ’யை அவரின் தாயார், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து, கலெக்டர் பல்லவி பல்தேவிடம் முறையிட்டார். உடனே தெரு நாய்களைப் பிடிக்க உத்தரவிட்டிருப்பதாக கலெக்டர் கூறியுள்ளார்.

வெறிநாய்க் கடி... தகவல்கள்... சிகிச்சைகள்... ஆலோசனைகள்! #WorldRabiesDay

இது தொடர்பாகத் தேனி அல்லிநகரம் நகராட்சி அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ``நேற்று 11 பேரைக் கடித்த நாயை இரவோடு இரவாகப் பிடித்துவிட்டோம். தொடர்ந்து தெருநாய்களைப் பிடிக்க இருக்கிறோம். அவற்றுக்குத் கருத்தடை செய்ய இருக்கிறோம். பொதுவாக, விலக்குகள் நல வாரியத்திலிருந்து மானியம் வரும், அவர்களும் நகராட்சி நிர்வாகமும் இணைந்துதான் தெருநாய்களைப் பிடித்து கருத்தடை செய்வோம். ஆனால், கடந்த 4 வருடங்களாக மானியம் ஏதும் இல்லை. தற்போது நகருக்குள் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகமானதால், நகராட்சி நிதியிலிருந்து அவற்றைப் பிடித்து கருத்தடை செய்ய இருக்கிறோம்” என்றார்.

Street Dogs
Street Dogs

நான்கு ஆண்டுகளாக மானியத்தொகை வராத ஒரே காரணத்துக்காக தெருநாய்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்காக அதிகரித்துவிட்டன. இது தேனி அல்லிநகரம் நகராட்சி மட்டும்தான் என்றால், இல்லை! மாவட்டம் முழுவதும் உள்ள நகராட்சி பேரூராட்சிகளில் இதுதான் நிலை. இனியாவது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?