Published:Updated:

6 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 11 வயது சிறுவன் - ‘மறைந்தும் வாழ்கிறான்’ எனப் பெற்றோர் நெகிழ்ச்சி!

சிறுவன் சுதீஷ்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதில், ஆறு பேர் மறுவாழ்வு பெறுகிறார்கள்.

6 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 11 வயது சிறுவன் - ‘மறைந்தும் வாழ்கிறான்’ எனப் பெற்றோர் நெகிழ்ச்சி!

விபத்தில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதில், ஆறு பேர் மறுவாழ்வு பெறுகிறார்கள்.

Published:Updated:
சிறுவன் சுதீஷ்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகிலிருக்கும் கொசவன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியர் கோவிந்தராஜ் - அர்ச்சனா. இந்தத் தம்பதிக்கு 11 வயதில் சுதீஷ், 10 வயதில் கோகுல், 7 வயதில் ரோஹித் என மூன்று மகன்கள் இருக்கிறார்கள். மூத்த மகன் சுதீஷ் அங்கிருக்கும் பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்துவந்தான். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக குடியான்குப்பம் பிரதான சாலையில் தந்தையுடன் நின்றுகொண்டிருந்தான். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த பைக் சிறுவன் சுதீஷ்மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சிறுவனை அவன் தந்தையும், அங்கிருந்த மக்களும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுவந்தனர்.

சிறுவன் சுதீஷ்
சிறுவன் சுதீஷ்

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான். மருத்துவக்குழுவினர் அளித்த தீவிர சிகிச்சை பலனிக்காமல் போன நிலையில், நேற்றைய தினம் சிறுவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. தொடர்ந்து, சிறுவனின் உடல் உறுப்புகளை தானமாகக் கொடுத்து பிறரை வாழவைக்க பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி, சிறுவனின் இதயம், நுரையீரல் சென்னையிலிருக்கும் எம்.ஜி.எம்., அப்போலோ மருத்துவமனைகளுக்கும், சிறுவனின் கல்லீரல், இடது சிறுநீரகம், கண்கள் சி.எம்.சி மருத்துவமனை பயனாளிகளுக்கும், வலது சிறுநீரகம் போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

மரணம்
மரணம்
சித்திரிப்புப் படம்

இதன் மூலம் ஆறு பேர் மறுவாழ்வு பெறுகிறார்கள். ‘‘எங்கள் மகன் மறைந்தாலும் இவர்கள் மூலம் இன்னும் 100 ஆண்டுகள் இந்த மண்ணில் அவன் வாழ்ந்துக்கொண்டுதான் இருப்பான்’’ என்று கதறித் துடிக்கிறார்கள் பெற்றோரும் உறவினர்களும்!