வெளியிடப்பட்ட நேரம்: 00:45 (07/12/2017)

கடைசி தொடர்பு:07:42 (07/12/2017)

சென்னைப் புத்தகக்காட்சி 2018 - ப.பா.சி அமைப்புக்குப் புதிய நிர்வாகிகள் தேர்வு

சென்னைப் புத்தகக்காட்சி

நாற்பது ஆண்டுகளாக நடந்துவரும் சென்னைப் புத்தகக் காட்சியின் ஏற்பாட்டாளர்களான தென்னிந்தியப் புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் இன்று நடந்தது. இதில், அடுத்துவரும் இரண்டு ஆண்டுகளுக்கான நிர்வாகிகளும் நிரந்தரப் புத்தகக்காட்சிக்கான பிரதிநிதிகளும் தேர்வுசெய்யப்பட்டனர். 

தலைவராக வயிரவன், செயலாளராக அரு.வெங்கடாசலம், துணைத்தலைவர்களாக பெ.மயிலவேலன் (தமிழ்), ஏ.ஆர்.சிவராமன் (ஆங்கிலம்), பொருளாளராக டி.எஸ். சீனிவாசன், இணைச்செயலராக அ.குமரன், துணை இணைச்செயலர்களாக எஸ். சுரேஷ்குமார் (தமிழ்), பி.குருதேவ்(ஆங்கிலம்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

நிர்வாகக்குழு உறுப்பினர்களாக விகடன் மீடியா சர்வீசஸ் நிறுவனத்தின் எம்.ஏ. ரங்கராஜன், கே. ஜலாலுதீன், ஆர்.எம்.மெய்யப்பன், வி. புருசோத்தமன் (தமிழ்), ஆர்.மாசிலாமணி, ஐ.முபாரக், எம்.சிராஜிதீன்,எஸ்.சுப்ரமணியன் (ஆங்கிலம்), நிரந்தரப் புத்தகக்காட்சி உறுப்பினர்களாக பி.கதிரேசன், எஸ்.பிரபாகரன் (தமிழ்), பி.பார்த்தசாரதி, பி.எம்.சிவக்குமார் (ஆங்கிலம்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

இவர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். வரும் ஜனவரியில் நடைபெறவுள்ள 41-வது சென்னைப் புத்தகக்காட்சியையும் அடுத்த ஆண்டு நடக்கும் புத்தகக்காட்சியையும் இந்தக் குழுவினர் பொறுப்பேற்று நடத்துவார்கள்.