வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (07/12/2017)

கடைசி தொடர்பு:12:37 (07/12/2017)

டெல்லியில் டாக்டர் கிருஷ்ணசாமி நடத்திய பேரணி!

தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை எஸ்.சி பட்டியலிலிருந்து நீக்கி, இடஒதுக்கீட்டோடுகூடிய தனிப்பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி தேவேந்திர குல வேளாளர் அடையாள மீட்புப் பேரணி நேற்று டெல்லியில் நடத்தப்பட்டது.

டெல்லி பேரணியில் கிருஷ்ணசாமி

தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலிருந்து தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை வெளியேற்ற வேண்டுமென்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, சமீபத்தில் சென்னையில் தேவேந்திர குல வேளாளர் அடையாள மீட்பு மாநாடு நடத்தினார்.

தங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசுக்கும் தமிழக அரசிடமும் நேரில் சென்று கொடுத்துள்ள நிலையில், நேற்று புதிய தமிழகம் கட்சியினர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் கோரிக்கையை வலியுறுத்தி ஏராளமானோர் பேரணி சென்றனர். இதில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவும் கலந்துகொண்டு அவர்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தேசியத் தலைவர்களை அழைத்து மதுரையில் பெரிய அளவில் மாநாடு நடத்தவுள்ளதாக டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க