வெளியிடப்பட்ட நேரம்: 03:15 (07/12/2017)

கடைசி தொடர்பு:08:03 (07/12/2017)

திருச்சி, துவரங்குறிச்சி அருகே விபத்து: 10 பேர் பலி எனத் தகவல்!

திருச்சியை அடுத்துள்ள துவரங்குறிச்சி அருகே, லாரியும் வேனும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.


விபத்து

 துவரங்குறிச்சி அருகே, நாகர்கோவிலிலிருந்து திருப்பதி சென்ற சுற்றுலா வேன்மீது லாரி மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வந்துள்ளது. இந்தக் கோர விபத்தில் மூன்று குழந்தைகள், இரண்டு பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையில் காயமடைந்தவர்கள் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.