விபத்தில் பலியான வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்! | Youth dead due to an accident, organs donated

வெளியிடப்பட்ட நேரம்: 05:13 (07/12/2017)

கடைசி தொடர்பு:07:45 (07/12/2017)

விபத்தில் பலியான வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்!

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், விபத்தினால் மூளைச்சாவடைந்த  இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

உடல் உறுப்பு தானம்

சென்னை, அலெக்ஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (37).  சொந்தமாக வண்ண மீன் பண்ணை நடத்திவந்தார். கடந்தராஜேஷ் குமார் திங்கள்கிழமையன்று தனது நண்பர் ஒருவரை கோயம்பேடு பேருந்து நிலயத்தில் இறக்கிவிட்டுவிட்டு வீடு திரும்பும் வழியில்,  அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ராஜேஷ்குமார் மீது மோதி, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டுசெல்லப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு  மூளைச் சாவடைந்தார். உடனடியாக இதுகுறித்து அவரின் குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், உடலுறுப்பு தானம் பற்றியும் குடும்பத்தினரிடம் கலந்தாலோசிக்கப்பட்டது. அவர்கள் சம்மதம் தெரிவிக்கவே, ராஜேஷ் குமாரின் இதயம், சிறுநீரகம், கண்கள், தோல் ஆகியவை தானமாகப் பெறப்பட்டது. 

ஒரு சிறுநீரகம் மற்றும் தோல் ஆகிய இரண்டும், ஸ்டான்லி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம், கே.எம்.சி மருத்துவமனைக்கும் கண்கள், எழும்பூர் மருத்துவமனைக்கும் இதயம், ஒரு தனியார் மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டது. இதயம், போக்குவரத்துக் காவலர்களின் உதவியுடன் வேகமாகக் கொண்டுசெல்லப்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனையின் முதல்வர், டாக்டர். பென்னம்பல நமச்சிவாயம் தலைமையில் நோயாளி ஒருவருக்கு  உடனடியாகப்  பொருத்தப்பட்டது. 

உறுப்பு தானம்

இறந்த ராஜேஷ்குமாரின் மனைவி ஆனந்தி (28), ஆசிரியர் பயிற்சி முடித்தவர். இவருக்கு ஷியானி (4), பிரியதர்சன் (9) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க