மருத்துவ சிகிச்சை நிறைவு: நாடு திரும்பினார் விஜயகாந்த்

மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த விஜயகாந்த் இன்று இந்தியா திரும்பினார்.

விஜயகாந்த்

உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த், ஏற்கெனவே சிங்கப்பூர் சென்று மருத்துவ சிகிச்சைபெற்று வந்திருந்தார். ஆனால், விஜயகாந்த்துக்கு பேசுவதில் தொடர்ந்து சிரமம் இருந்துவந்தது. இந்த நிலையில், கடந்த 28-ம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் மீண்டும் சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் சென்றிருந்த நிலையில், அங்கு அவர் ஹோட்டல்களில் உணவருந்தும் புகைப்படங்கள் சில நாள்களுக்கு முன்னர் வெளிவந்து சமூக வலைதளங்களில் வைரலாகியது.

விஜயகாந்த்

தற்போது, மீண்டும் சிகிச்சைப் பெறும் உடை அணிந்து மருத்துவமனை ஊழியருடன் விஜயகாந்த் நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அதனால் வரும் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் அறிவித்திருந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தனது மருத்துவ சிகிச்சையை நிறைவு செய்துள்ளார். சிகிச்சை முடிந்து இன்று விஜயகாந்த் சிங்கப்பூரிலிருந்து இந்தியா திரும்பியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!