தூக்கக் கலக்கத்தில் ஓட்டுநர்! - மழைநீர் குட்டைக்குள் பாய்ந்த சுற்றுலா கார்

ராமேஸ்வரம் வந்த சுற்றுலாப் பயணிகளின் கார் ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தினால், சாலை ஓரத்தில் தேங்கியிருந்த மழைநீர் குட்டையில் பாய்ந்தது. காரில் பயணம் செய்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சந்திரசேகர் என்பவர் தனது குடும்பத்துடன் காரில் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து கொண்டிருந்தார். காரை சந்திரசேகர் ஓட்டியுள்ளார். காரில் சந்திரசேகரின் குடும்பத்தினர் 4 பேர் இருந்தனர்.

ராமேஸ்வரம் அருகே மழை நீர் குட்டையில் பாய்ந்த கார்

இந்தக் கார் இன்று காலை ராமேஸ்வரத்துக்கு முன்பாக உள்ள மரைக்காயர் பட்டினம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது காரை ஓட்டி வந்த சந்திரசேகர் தூக்க கலக்கத்தில் கண் அயர்ந்த நிலையில் கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து, கட்டுப்பாட்டை இழந்த கார் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் தேங்கியிருந்த மழை நீர் குட்டையில் பாய்ந்தது.

இதில் காரில் இருந்த சந்திரசேகர் உள்ளிட்ட 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயம்பட்டவர்களை அப்பகுதியில் இருந்து வந்தவர்கள் மீட்டு ராமநாதபுரம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மழை நீர் குட்டையில்  குறைவான நீர் இருந்ததால் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!