``டெல்லி ஏஜென்ட்டாகச் செயல்படும் தமிழக ஆளுநர்!”: வைகோ கண்டனம்

"தமிழக ஆளுநர், டெல்லி ஏஜென்ட்டாகச் செயல்படுகிறார்” என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

வைகோ

கோவையைத் தொடர்ந்து, நெல்லையில் இரண்டு இடங்களில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வுமேற்கொண்டார். அங்கு, குப்பைகளைச் சுத்தம்செய்த அவர், அங்கிருந்த பொதுமக்களிடம் கலந்துரையாடினார். பேருந்து நிலையத்தில் இருந்த ஹோட்டல் ஒன்றில் ஆய்வு செய்த அவர், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினார். பின்னர், பயணிகளிடம் தூய்மை இந்தியா திட்டம்குறித்த பிட் நோட்டீஸ்களை வழங்கி, உறுதிமொழி எடுத்துக்கொண்டார். 

இதுகுறித்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், “தமிழக ஆளுநர் தொடர்ந்து மாவட்டப் பணிகளில் ஆய்வு மேற்கொள்வது, தமிழகத்தில் மாநில சுயாட்சிக்கு எதிரானது. இதனால், தமிழகத்தில் இரட்டை ஆட்சி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லியின் ஏஜென்ட்டாகவே செயல்பட்டுவருகிறார். அவரின் நடவடிக்கையை தமிழகத்தின் ஆளுங்கட்சி வெறுமனே வேடிக்கை பார்த்துவருகிறது. தமிழகத்தில் அரசுப் பணிகள் முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!