ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரிக்கு எதிராக கொந்தளிக்கும் திவாகரன்!

"ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குழப்பம் ஏதும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை மாற்ற வேண்டும்” என திவாகரன் கோரிக்கை வைத்துள்ளார்.

திவாகரன்

இரட்டை இலை சின்னமும் அ.தி.மு.க கட்சியும் கிடைத்த உற்சாகத்தில், ஆர்.கே. நகர் தேர்தலில் உற்சாகமாகக் களம் இறங்குகிறது எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. இத்தனை நாள்கள் மூவர்ணக் கொடியையும் அ.தி.மு.க-வின் பெயரையும் பின்புலமாகக்கொண்டு அரசியல் செய்துவந்த டி.டி.வி தினகரன், கொடியையும் பயன்படுத்த முடியாமல், அ.தி.மு.க என்ற கட்சியும் இல்லாமல்  சுயேச்சை வேட்பாளராக மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், வரும் இடைத்தேர்தல்குறித்து திவாகரன் கூறுகையில், “ஆர்.கே.நகரில் தினகரனுக்கு ஆதரவு உள்ளது. தொப்பி சின்னம் கிடைத்தால் கண்டிப்பாக 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றிபெறுவார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும்போதே பல குழப்பங்கள் ஏற்பட்டுவருகின்றன. விஷால் விவகாரத்தில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. இதுபோன்ற குழப்பம் நீடிக்காமல் இருக்க, தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை மாற்ற வேண்டும்” என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!